ராஜ்கௌதமன் சிறப்பிதழுக்கான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

Narumpunal
0




வணக்கம்.
நறும்புனல் தமிழியல் ஆய்விதழின் சூன் 2025 அரையாண்டுக்கான இதழ் அறிஞர் ராஜ்கௌதமன் சிறப்பிதழாக அமையவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

தமிழ் ஆய்வாளர்கள் கட்டுரைகளை அனுப்பி வைக்கக் கேட்டுக்கொள்கிறோம். 

கட்டுரையாளர் கவனத்திற்கு...

  • கட்டுரைகள் 'ராஜ்கௌதமன் படைப்புலகும் கருத்துலகும்' எனும் பொருண்மையை ஒட்டி ஆய்வுநோக்கிலும் பொருட்செறிவுடனும் அமைதல் வேண்டும்.

  • கட்டுரை யூனிக்கோடு எழுத்துருவில் A4 தாள் அளவிலும் 1.5 வரி இடைவெளியுடனும் எழுத்துரு 12 அளவிலும் இருத்தல் அவசியம். (Unicode font, A4 Size, 1.5 Line Spacing).

  • ஆய்வுச்சுருக்கம், முதன்மைச் சொற்கள், முடிவுரை இருத்தல் வேண்டும்

  • கட்டுரையில் அடிக்குறிப்புகள், துணைநூற்பட்டியல் இருத்தல் வேண்டும்.

  • கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமையலாம்.

  • கட்டுரைகள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி அமைதல் வேண்டும்.

  • கட்டுரையின் முடிவில் கட்டுரையாளர் புகைப்படம் (விரும்பினால்) முகவரி, தொடர்பு அலைபேசி எண் குறிப்பிடுதல் நன்று.

  • கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளை narumpunal@gmail.com என்ற மின்னுஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

  • 31.05.2025 வரையில் கட்டுரைகள் பெறப்படும்.




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!